நெடுவாசல் மக்களுக்கு சட்டப்படியான உதவிகள் செய்வேன் – மார்கண்டேய கட்ஜூ உறுதி

அமெரிக்கத் தமிழர்கள் சார்பாக சாக்ரமெண்டோ , டல்லாஸ் , அட்லாண்டா நகரங்களில் ஏப்ரல் 1.2 ஆகிய நாட்களில் நடத்தப்படும் விழாவிற்கு நான் செல்ல உள்ளேன் . நான் அங்கு தமிழக விவசாயிகள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் பேச உள்ளேன் .
” நானும் ஒரு தமிழன் ” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற மார்கண்டேய கட்ஜூ சொல்லியிருந்தார்.

இவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர், தமிழ் மொழி மீது பற்று கொண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்தவர். இதனால் தமிழர்கள் மற்றும் தமிழர் கலாசாரத்தின் மீதும் மதிப்பு கொண்டார். ஜல்லிக்கட்டு பிரச்சினையிலும் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

அமெரிக்காவில் அவர் பேசும்போது,

மக்களையும், விவசாயத்தையும், குடிநீரையும், சுற்றுச் சூழலையும் பாதிக்காத அறிவியல் தான் நமக்கு வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் பாதிக்கும் என்றால், அந்தத் திட்டம் தமிழகத்துக்கு வேண்டாம். அரசாங்கம் வியாபார நோக்கத்தில் செயல்படக்கூடாது. முதலில் மக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் போராடும் தமிழக மக்களுக்கு சட்டப்படியான உதவிகளைச் செய்வேன். போராடுபவர்கள் அழைப்பு விடுத்தால், தமிழ்நாட்டுக்கு நேரில் செல்வேன். இந்தத் திட்டத்தை முற்றிலும் தடை செய்ய உதவி செய்வேன்.

அமைதி வழிப் போராட்டங்கள் நடத்த ஒவ்வொருவருக்கும் சட்டத்தில் உரிமை உண்டு. இந்த உரிமையை தடுப்பது மனித உரிமை மீறல். தமிழ்நாட்டில் அண்மையில் உழவே தலை மாநாட்டுக்கு போலீசார் அனுமதி மறுப்பது மனித உரிமை மீறல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response