‘சிவலிங்கா’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் இடம்பெற்றுள்ள மர்ம ‘புறா’..!


லாரன்ஸின் அடுத்த படமான ‘சிவலிங்கா’ வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸாக இருக்கிறது.. கமர்சியல் படங்களை தருவதில் வித்தகரான பி.வாசு இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்க, வடிவேலு – சக்திவேல் வாசு இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப்படம் ஹாரர் திரில்லராக உருவாகியுள்ளது.

பி.வாசு இதற்குமுன் இயக்கிய ‘சந்திரமுகி’யில் ஒரு மிகப்பெரிய பாம்பு முக்கியமானதாக இருந்தது போல், இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் ஒரு புறா நடித்துள்ளது. புறாவைப்பார்க்கும்போது அடுத்து என்ன பண்ணப்போகிறதோ என எதிர்பார்க்க வைக்குமாம். எப்படி ஒரு புறா ஒரு கொலைக்கு சாட்சியாக முடியும் என்கிற வகையில் ஒரு புது கண்டன்ட்டை கதையாக்கியுள்ளாராம் பி.வாசு.

Leave a Response