
சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் விஷால் தலைமையிலான ‘நம்ம அணி’ நிர்வாகிகள் இசைஞானி இளையராஜா அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற அந்த சந்திப்பை தொடர்ந்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய விஷால் இசைஞானிக்கு பிரமாண்டமான பாராட்டு விழா எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி விஷால் கூறும்போது, “நாங்கள் இசைஞானி இளையராஜாவுக்கு மிக பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தவுள்ளோம்.. இவ்விழா இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் பாராட்டு விழாவாக இருக்கும். இந்த பாராட்டு விழா சென்னையில் தான் நடக்கும். இந்த விழா சென்னையில் நடப்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதற்கான பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது” என கூறியுள்ளார்..


