ரஜினி பட டைட்டில்களை கைப்பற்றுவதில் இசையமைப்பாளர்கள் இருவருக்கும் நடக்கும் ரேஸ்..!


அஜித் விஜய்யில் இருந்து அறிமுகமாகும் ஹீரோக்கள் வரை எல்லோருமே தங்கள் படத்துக்கு வைத்தால் ரஜினி நடித்த பட டைட்டிலை நன்றாக இருக்குமே என்றுதான் நினைப்பார்கள்.. இப்போது அந்த ஆசையும் அதற்கான போட்டியும் ஜி.வி.பிரகாஷ்-விஜய் ஆண்டனி வரை வந்து நிற்கிறது.

நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ரஜினி நடிப்பில் 1979-ல் வெளியான `குப்பத்து ராஜா’ என்ற படத்தின் தலைப்பை, இப்படத்திற்காக படக்குழு கைப்பற்றியுள்ளது.

இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்க உள்ளார். பூனம் பாஜ்வா இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதேபோல கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.. இந்தப்படத்திற்கு ரஜினியின் சூப்பர்ஹிட் படமான `காளி’ என்கிற டைட்டிலைத்தான் வைத்துள்ளார்கள்..

இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தானே தயாரிக்க உள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 1980-ல் மகேந்திரன் இயக்கத்தில் `காளி’ என்ற படத்தில் ரஜினி, நடித்திருந்தார். இப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது

Leave a Response