கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் நடித்த இரண்டு ஹீரோயின்களில், ஜிம்ஸி என்கிற கேரக்டரில் நடித்திருந்த அபர்ணா முரளி, ரசிகர்களின் மொத்த ஆதரவையும் தட்டிச்சென்றார். இதுதான் அவருக்கு முதல் படமும் கூட..
படத்தை பார்த்த மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தானே இவரை அழைத்து பாராட்டினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மலையாளத்தில் தற்போது சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் தற்போது ‘8 தோட்டாக்கள்’ படம் மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.. அறிமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பத்திரிக்கை நிருபராக நடித்துள்ளார் அபர்ணா..
இந்தப்படத்தின் மூலம் அபர்ணாவுக்கு தமிழ்சினிமாவில் நிரந்தரமாக தங்குவதற்கான விலாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். வரும் ஏப்-7ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படத்தில் புதுமுகம் வெற்றி கதாநாயகனாக நடிக்க, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.