கபாலி, அதே கண்கள் படங்களை தொடர்ந்து தமிழ்சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பெற்றுள்ள கலையரசன் தற்போது உரு என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் அவர் எழுத்தாளராக நடிக்கிறார். ஒரு காலத்தில் பிசியான எழுத்தாளராக இருந்த அவருக்கு மார்கெட் டல்லடிக்கிறது.
இதனால் பேய் கதை எழுதி சம்பாதிக்க நினைக்கும் அவர் அதற்காக மேகமலையில் உள்ள அடர்ந்த காட்டுக்குச் செல்கிறார். அங்கு உட்கார்ந்து கதை எழுதினால் அவர் எழுதும் காட்சிகள் மறுநாள் நிஜத்தில் நடக்கிறது. இப்படி போகிற கதை. இந்தப் படம் பேய் படம்தான் என்றாலும் பேய் எதுவும் கிடையாதாம்
அப்படியொரு வித்தியாசமான திரைக்கதை என்கிறார் இயக்குனர் விக்கி ஆனந்த். இதில் தன்ஷிகா, மைம்கோபி, டேனியல், கார்த்திகா நடிக்கிறார்கள். மேகமலை மற்றும் கொடைக்கானலில் 32 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் வெளிவர இருக்கிறது.