ராகுல்காந்தி சந்திப்பில் நடந்தது என்ன? – பா.இரஞ்சித் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இயக்குநர் பா.இரஞ்சித் சந்தித்திருக்கிறார். அப்போது என்ன நடந்தது? என்பது பற்றிய குறிப்பு…

காங்கிரஸ் ராகுல் காந்தி .. தோழர் இயக்குனர் ரஞ்சித் சந்திப்பு பற்றி .. நண்பர் ரஞ்சித்யிடமே தொலைபேசியில் பேசினேன் ..
மிகவும் ஆரோக்கியமான உரையாடல் என்றார் …
ராகுல் தன்னை “outcaste” என்றும் நானும் தலித் தான் என்றும் …
பார்ப்பனிய வேத கோட்பாடுகள் எதிராக புத்தர் நடத்திய போராட்டங்கள் ..
அண்ணல் அம்பேத்கர் நடத்திய போராட்டங்கள் பற்றி இருவரும் பகிர்ந்து கொண்டதையும் பகிர்ந்தார்….
புத்த நெறியை மதமாக மாற்றி ..அதில் சடங்குகள் புகுத்திய பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் திசை மாறி .. இப்போது தாய்லாந்து ..மாயன்மார .. இலங்கையில் எவ்வாறு மத வெறியாக உலா வருகிறது என்று ராகுல் கூறியதை தோழர் ரஞ்சித் பதிவு செய்தார்…
பா.ஜ.க ..சங்கிகள்.. தலித் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள்… அவர்களின் சதியை உணர தவறியது ஏன்…. பிரித்தாலும் சூழ்ச்சி வலையில் இருந்து பாதுகாக்க வேண்டிய களப்பணி பற்றி உரையாடல் இருந்தது என்று கூறினார்…

தோழர் ரஞ்சித் இறுதியாக தோழர் பேரரிவாளன் விடுதலை பற்றி நேரடியான கேள்வியை கேட்டு இருக்கிறார் …
அதற்கு ராகுல் காந்தி .. தனிப்பட்ட முறையில் அவர்களின் விடுதலைக்கு தடையாக இருக்க மாட்டேன்…
சட்ட சிக்கலும்.. தன் தந்தை கொலை ஆழ்ந்த சதிகளும் அவர் விடுதலை தடையாக இருப்பதாக உணர்கிறேன் என்றார் …நல்ல சூழல் வந்தால் அவர்களின் விடுதலைக்கு உதவி செய்ய வேண்டும் என்று தோழர் ரஞ்சித் கோரிக்கை விடுத்து வந்ததாக கூறினார்.

மருத்துவர் நா.எழிலன்.

Leave a Response