அமெரிக்காவில் யுனைடட் ஏர்லைன்ஸ் வானூர்தியில் 10 வயதுச் சிறுமி ஏறச் செல்கிறாள். அவள் லெக்கின்ஸ் அணிந்திருந்தாள். அங்கிருக்கும் பெண் காவல் அதிகாரி லெக்கின்சுடன் வானூர்தி ஏறக் கூடாது எனத் தடை விதிக்கிறார். நல்லவேளையாக அச்சிறுமியிடம் மாற்றுடை, அதுவும் அடக்கமான உடை இருந்ததால் அவள் தப்பித்தாள். அவள் உடையை மாற்றிக் கொண்ட பிறகுதான் உள்ளே விட்டார்கள். ஆனால் அவளுடன் கூட வந்த இரு தோழியரும் லெக்கின்ஸ் அணிந்திருந்தனர். அவர்களிடம் மாற்றுடை இல்லாததால் வானூர்தி ஏற முடியவில்லை.
அமெரிக்காவில் அரங்கேறியுள்ள இந்த ஆணாதிக்க ஆடைக் கூத்து கடும் எதிர்ப்பையும் சந்தித்துள்ளது. ஆனால் இதற்கு ஆதரவாகவும் பழமை ஆணாதிக்கவாதிகள் கிளம்பி விட்டார்களாம்.
டிரம்ப் அதிபரான பின்பு அமெரிக்கப் பத்தாம்பசலிகளுக்கு ஒரே கொண்டாட்டந்தானாம். என்றோ உள்ள ஆணாதிக்கச் சட்டங்களை இப்போது தூசி தட்டி எடுக்கிறார்களாம். அந்தப் பத்து வயதுச் சிறுமிக்கு விதிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு கூட பரணில் ஏற்றப்பட்ட விதிகள்தானாம். இப்போது அவை ஒவ்வொன்றாக பெண்களின் உரிமை பறிக்க வருகின்றன.
உலகெங்கும் பிற்போக்குத்தனம் என்றாலே முதல் பலிகடா பெண்கள்தானோ?