நெல்.ஜெயராமனுக்கு ஏர்முனை நிதியுதவி


திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நெல். ஜெயராமன். அவர் உடல்நலம் குறைவால் அவதிப்படுகிறார் என்று ஊடகங்களில் செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து, ஏர்முனை இளைஞர் அணி சார்பாக அவருக்கு நிதியுதவி செய்யப்பட்டது. அது பற்றிய செய்திக்குறிப்பு……..புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகள் பலவற்றை மீட்டெடுத்த திரு.நெல்.ஜெயராமன் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக வசூலிக்கப்பட்ட நிதி ரூ 100000 (ஒரு லட்சம்) மார்ச் 25 அன்று சென்னையில் சிகிச்சைக்காக வந்திருக்கும் அவரிடம் நேரடியாக வழங்கப்பட்டது.

ஏர்முனைக்கு நேரடி பரிச்சயமற்ற திரு.நெல்.ஜெயராமன் அவர்கள் விவசாயத்துக்காகவும் தமிழகத்திற்காகவும் செய்த சேவையை குறிப்பிட்டு ,பொருளாதார பலமற்ற அவரின் சிகிச்சைக்கு பல லட்சங்கள் தேவைபடும் நிலையில் நம்மாலான உதவியை செய்வோம் என ஏர்முனையின் சார்பாக Facebook மற்றும் Watssup மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கி பொருளுதவி செய்த ஒவ்வொருவருக்கும் எங்களின் மிக பணிவான நன்றிகளும் வணக்கங்களும்.

ஏர்முனையின் வெளிப்படைதன்மைக்காக மிக விரைவில் நிதி அளித்தோர் விவரங்களை எங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிடுகிறோம்.

Leave a Response