ராஜஸ்தானில் மிதிபடும் ஜெயலலிதா -அதிமுகவினர் அதிர்ச்சி


முகநூலில் உலாவரும் ஓர் அதிர்ச்சித் தகவல்… ராஜஸ்தான் சமையலறை டைல்ஸ்களில் ஜெயலலிதா முகம்!

தமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்குச் சுற்றுலா சென்றவர்கள், அங்கு ஒரு உணவு விடுதி சமையலறையில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிய டைல்ஸ்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் என்ற ஊருக்கு தமிழகத்தைச் சேர்ந்த சிலர் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு இருந்த ஒரு உணவு விடுதி சமையல் அறையின் தரைதளத்தில் போடப்பட்டிருக்கும் டைல்ஸ்களில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுள்ளனர். மேலும், அங்குள்ள சந்தையில், ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டிய டைல்ஸ்கள் மலிவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

தமிழகத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் முகப்பில் ஜெயலலிதா முகம் பதித்த டைல்ஸ்களை ஒட்டுவது வழக்கம். அதற்காக தயாரிக்கப்பட்ட டைல்ஸ்கள் பிற மாநிலங்களுக்கு மலிவு விலைக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் டைல்ஸ் ஏற்றுமதி வணிகர்கள்!

Leave a Response