கோடிகளை காப்பாற்ற சுய கௌரவத்தை விட்டு கொடுக்க துணிவாரா சத்யராஜ்..?


காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி சத்யராஜ் கடுமையாக பல முறை கர்நாடகத்தை விமர்சித்து பேசியுள்ளார்.. இப்போது அதுவே பிரமாண்ட செலவில் ராஜமௌலி இயக்கியுள்ள பாகுபலி படத்தின் இரண்டாவது பாகத்திற்கு ஒரு பெரிய சிக்கலை கொண்டுவந்துளளது.

அடுத்த மாதம் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் என சில அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. காரணம் நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் நடித்துள்ளது தான்.. இதுநாள் வரை கர்நாடகாவை பற்றி எதிர்ப்பாக பேசியதற்கெல்லாம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்த சர்ச்சை வரும் நாட்களில் விஸ்வரூபம் எடுக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பாகுபலி ட்ரைலர் வெளியான அன்று கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் அங்கு எந்த தியேட்டரிலும் ட்ரைலர் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் வெளியாகவிட்டால் சில பல, கோடிகளில் இழப்பு ஏற்படும்.. அந்த இழப்பை சரிக்கட்டவேண்டும் என்றால் சத்யராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும்.. ஆனால் தன்மான தமிழன் சத்யராஜ் யாருக்கோ கிடைக்கவேண்டிய சில கோடிகளுக்காக தனது தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் தமிழனின் மானத்தையும் விட்டுத்தருவாரா..? இல்லை வீரம் காட்டுவாரா..? போகப்போகத்தான் தெரியும்..!

Leave a Response