நவம்பர் மாதம் மாவீரர் மாதம் என்று தமிழீழ தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் அனுசரிக்கும் நவம்பர் 27 மாவீரர் நாள் குறித்து
நடிகர் சத்யராஜ் அவர்கள் அவரது வீரவணக்கத்தை பதிவு செய்து உலகத்தமிழர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
அதில்…
வணக்கம், நவம்பர் 27 மாவீரர் நாள் அதற்கு அந்த மாவீரர்களுக்கு என் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
அவர்களுடைய வீரமும் தியாகமும் வீண்போகக்கூடாது
தமிழீழம் அமைவதற்கான முயற்சியில் அவரவர் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் போராடிக்கொண்டும் குரல் கொடுத்துக்கொண்டும் இருக்க வேண்டும்
எந்த வகையிலும் சலிப்படையக்கூடாது இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டதே என்று
குறிப்பாக சொல்லப்போனால் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற இனப்படுகொலை என்பது சமயத்தில் போர்க்குற்றம் என சுருக்குகிற சூழ்நிலை உருவாகி விடும்
அது இனப்படுகொலைதான் அப்படிங்கரத்துக்கான முன்னெடுப்புகள் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப்போரில் பாதிக்கப்பட்டவர்கள் ரொம்ப முக்கியமாக பாதிக்கப்பட்டவர்கள் அங்கே வடகிழக்கு மாகாணத்தில்தான் இருக்கிறார்கள் அவர்களுடைய சூழ்நிலையையும் நலனையும் மனதில் வைத்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் போராட்ட வடிவமும் உணர்ச்சி மிக்க எழுச்சி மிக்க உரைகளையும் நாம் ஆற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஏன்னா புலம்பெயர்ந்து வந்தவர்களின் நிலைமை வேறு தமிழ்நாட்டில் உள்ள உணர்வாளர்களின் நிலைமை சூழ்நிலை வேறு அங்கு வாழும் ஈழத்தமிழர்களான நம் தொப்புள்க்கொடி உறவுகளின் சூழ்நிலை வேறு அதையெல்லாம் மனதில் வைத்து
ஆனாலும் கூட இறுதி இலக்கு தமிழீழ விடுதலைதான் என்ற ஒற்றை இலக்கை மனதில் ஏற்றிக்கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.
என்றாவது ஒரு நாள் நிச்சயம் தமிழீழம் விடியும் என்ற நம்பிக்கை ஈழம் ஆதரவாளர்களுக்கு இருப்பதுபோல் எனக்கும் இருக்கிறது.
வென்றெடுப்போம் தமிழீழத்தை
நன்றி.
இவ்வாறு கூறியுள்ளார் சத்யராஜ்.