“நந்தினி’யை அபகரித்துவிட்டார் சுந்தர்.சி” ; கதறும் காமெடி நடிகர்..!


இதுநாள் வரை எந்தவிதமான சர்ச்சைகளிலும் பெரிய அளவில் சிக்காமல் இருந்தவர் இயக்குனர் சுந்தர்.சி.. ஆனால் தற்போது சின்னத்திரை சீரியல் தயாரிப்பது தொடர்பான ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.. சன் டிவியில் பெரும் ஆரவாரத்துடன் ஒளிபரப்பாகிவரும் நந்தினி’ என்கிற மெகா தொடரை சுந்தர்.சி தான் தயாரித்து வருகிறார்.. இந்தநிலையில் இந்த மெகா தொடரின் கதை என்னுடையது என நடிகரும் இயக்குநருமான வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

நந்தினி மெகா தொடர் ஒரு பிரமாண்ட சினிமாவுக்கு இணையாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் இப்போது நல்ல பிரபலமாகிவிட்டது. இந்த நிலையில் இந்தக் கதை தனக்குச் சொந்தமானது என்றும், தன்னிடம் கேட்டு வாங்கிய சுந்தர் சி, அதற்காக எதுவுமே தராமல் தொடரை ஒளிபரப்பிக் கொண்டிருப்பதாகவும் இயக்குநர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். ‘துப்பட்டா துப்பட்டா. உன் கன்னத்துல அப்பட்டா அப்பட்டா” என சத்யராஜிடம் கதை சொல்வாரே.. ஞாபகம் இருக்கிறதா.. அவர்தான் இந்த வேல்முருகன்..

“ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் சுந்தர் சி எனக்கு செஞ்சிட்டார். நந்தினி என்னோட கதை. இந்தக் கதையை என்கிட்ட வாங்கிட்டு அவர் சொன்னது, ‘உங்களுக்கு பணம்தானே பிரச்சினை.. அதை நான் பாத்துக்கிறேன்.. உங்க குடும்பத்துக்கு தேவையானதைப் பாத்துக்கிறேன்’னு சொன்னார். ஆனால் அதில் எதையுமே அவர் செய்யல. ஆரம்பத்துல செய்யற மாதிரி செஞ்சி, கடைசில என்னை கழுத்தறுத்துட்டார் என பொங்குகிறாராம் வேல்முருகன்..

இந்தப் புகாருக்கு இதுவரை சுந்தர் சி தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. அவர் வாய்திறந்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும்.

Leave a Response