முதல் பாகத்தில் இறந்தவரை 2ஆம் பாகத்தில் உயிர்ப்பித்த சுசீந்திரன்..!


சுசீந்திரன் இயக்கிய படங்களில் நான் மகான் அல்ல குறிப்பிடத்தக்க படம். கார்த்தி – காஜல் அகர்வால் நடித்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் அறம் செய்து பழகு படத்தோடு, நான் மகான் அல்ல படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்

சுசீந்திரன். முதல் பாகத்தில் நான்கு வில்லன்கள் நடித்தது போன்று இந்த பாகத்தில் நான்கு இளவட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். அவர்கள் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து படமாக்கி வருகிறார் சுசீந்திரன்.

அதேசமயம், இந்த படத்தில் வில்லனாக நடிப்பது சஸ்பென்சாக இருந்து வந்த நிலையில், தற்போது அருள்தாஸ் வில்லனாக நடிப்பது தெரியவந்துள்ளது. நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கு உதவி செய்யும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் அருள்தாஸ்.

அவரை இரண்டாம் பாகத்தில் வில்லனாக்கியிருக்கிறார் சுசீந்திரன். மேலும், இந்த படத்தையும் முதல் பாகத்தைப்போலவே வெற்றி படமாக்கிவிட வேண்டும் என்பதற்காக அதிரடியான ஒரு கதைக்களத்தை கையிலெடுத்திருக்கிறாராம் சுசீந்திரன்

Leave a Response