விஸ்வரூபம்-2வை விரைவுபடுத்தும் பணிகளில் இறங்கிய கமல்..!


கடந்த 2013 ஆம் ஆண்டும் கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘விஸ்வரூபம்’. இந்தபபடம் எடுக்கும் போதே அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க தொடங்கிவிட்டார் கமல். ஆனால் படப்பிடிப்பு விறுவிறுவென வளர்ந்து வந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கி கிடப்பில் போடப்பட்டது.

அதன் பிறகு கமல் நடிப்பில் ஏராளமான படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் ‘விஸ்வரூபம் 2′ படம் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் பெரிய தடைகள் நீங்கிவிட்டன. தொழில்நுட்பம் மற்றும் சட்ட ரீதியான பிரச்னைகள் மட்டுமே மீதமுள்ளன” என்று தெரிவித்துள்ளார் கமல்.

மேலும் இது குறித்து ஒரு பேட்டியில், “இன்னும் 6 மாத வேலை உள்ளன. என்னுடைய தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்ற படங்களிலும், விநியோக உரிமையிலும் பிஸியாக இருக்கிறார். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. நானும் ஆஸ்கர் ரவியும் அடிக்கடி சந்திக்கிறோம். விரைவில் படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து வெளியிட திட்டமிட்டிருக்கிறேன்” என்ரம் கூறியுள்ளார் கமல்

Leave a Response