ரஜினி படத்துக்கு ரூ,20 கோடி செலவில் பிரம்மாண்ட அரங்கு..!


ரஜினி தற்போது ஷங்கர் இயக்கும் பிரம்மாண்ட படமான 2.ஓ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் முதலில் ரூ.350 கோடி என கணக்கிடப்பட்டு தொடங்கப்பட்டது.

ஆனால், தற்போது ரூ.450 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்படத்திற்காக சென்னை அருகே பிரம்மாண்ட அரங்கு அமைத்து படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அரங்குக்கு மட்டுமே ரூ.20 கோடி வரை செலவு செய்துள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது.

ரஜினியுடன் எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Leave a Response