
படத்தை இயக்கியது மிகப்பெரிய இயக்குனர் இல்லை.. படத்தில் நடித்தவர் தற்போதைய நிலையில் மிகப்பெரிய ஹீரோவும் இல்லை.. மாற்றமும் நடித்தவர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் கூட புதியவர்களே.. ஆனால் படம் வெளியாகி ஐம்பது நாளை தொட்டு வெற்றிகரமாக ஓடுகிறது..
ஆம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தை பற்றித்தான் சொல்கிறோம். படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் 22 வயதான இளைஞர்.. சினிமா முன் அனுபவம் இல்லாதவர்.. படத்தின் கதை நாயகனாக நடித்திருந்த ரகுமானை ரசிகர்களுக்கு தெரிந்தாலும் கூட அவருக்காக என யாரும் படம் பார்க்க தியேட்டருக்கு செல்வதில்லை..
ஆனால் பின்னே எப்படி படம் ஐம்பது நாளை கடந்தது..? காரணம் கதை.. வலுவான திரைக்கதை.. முறையான பப்ளிசிட்டி என பல தூண்கள் இந்தப்படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கின்றன.. நல்ல படங்களாக இருந்தால் சிறிய படங்களும் ஓடும் என்கிற நம்பிக்கையைத்தான் இந்தப்படம் விதித்துள்ளது.


