‘நரகாசுரன்’ ; தில்லாக டைட்டில் வைத்த ‘துருவங்கள் 16’ இயக்குனர்..!


கடந்தாண்டின் இறுதிப்படமாக சமீபத்தில் ‘துருவங்கள் 16’ வெளியானது. அறிமுக இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

புதுமையான திரைக்கதை, எடிட்டிங் என பல்வேறு விஷயங்களுக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் தங்களுடைய சமூக வலைதளத்திலும், நேரிலும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

2016-ம் ஆண்டில் இறுதியாக வெளியான லாபகரமான படம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். இயக்குநர் கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது தனது அடுத்த படம் குறித்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்..

படத்திற்கு ’நரகாசுரன்’ என ஆண்டி ஹீரோ டைட்டிலை வைத்துள்ள கார்த்திக் நரேன் “தேவதைகள் மட்டுமல்ல, சாத்தான்களுக்கும் ஒரு இருண்ட பக்கம் இருக்கும்” என்று சிறிய ஹின்ட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

Leave a Response