ரம்மி இயக்குநரின் அடுத்த படத்தின் கதை இதுதான்

2014 ஜனவரியில், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ரம்மி. அப்படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன்.கே கதை, திரைக்கதை எழுதி இயக்கும் அடுத்த படம் கதாயுதம். இந்தப் படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. ரம்மி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தயாரிக்கும் படம் இது.

ஜோக்கர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப்பட்டவர் குருசோமசுந்தரம். துருவங்கள் 16 படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் ரகுமான். இந்த இருவரும் “ கதாயுதம் “ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக இந்தியா பாகிஸ்தான் படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா, பாரதிகண்ணன் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு வசனம் மோநா.பழனிச்சாமி,ஒளிப்பதிவு-ஞானம்,இசை-ஸ்ரீகாந்த் தேவா,பாடல்கள் -கபிலன், மோநா.பழனிச்சாமி,
படத்தொகுப்பு-சசிகுமார்.ஜி,கலை-ஆர்.விஜயகுமார்,நடனம்-பிருந்தா, சிவராக் சங்கர், சண்டைப்பயிற்சி-சக்திசரவணன்

படத்தை பற்றி இயக்குநர் பாலகிருஷ்ணன்.கே கூறியதாவது…

வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும் அப்படிக் கனவுகளோடு இருக்கிற இரண்டு பேர் சந்திக்கிறதும், அவங்க கனவு நிறைவேறப் போராடுறதும் தான் கதை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது என்றார்.

Leave a Response