விஜய் படத்தை இயக்குவதற்கு ஹரி தயங்குவதற்கு காரணம் இதுதான்..!


கோலிவுட்டில் தொடர்ந்து ஆக்ஷன் தொடர்பான கதைகளுடன் சென்டிமெண்ட், காமெடி, ரொமான்ஸ் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து கொடுப்பதில் திறமை வாய்ந்தவர் இயக்குனர் ஹரி. தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அடுத்து இளையதளபதி விஜய்யை வைத்து இயக்க இருப்பதாகவும், அதற்காக சரியான தயாரிப்பாளரையும் தேடி வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹரி கூறியிருப்பதாவது:

“நான் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க விரும்புகிறேன். அவரை மட்டுமல்ல, அவரைப் போன்ற பல ஹீரோக்களையும் நான் இயக்க விரும்புகிறேன். ஆனால், இதுவரை விஜய்யின் மாஸ்க்கு ஏற்ற தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. ஒருவேளை அவருக்கு ஏற்ற தயாரிப்பாளர் கிடைத்தால் நான், அவருடன் நிச்சயமாக இணைவேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Response