ஆர்.கே ஜோடியாக நடிக்கிறார் மோனல் கஜார்..!


தமிழில் வானவராயன் வல்லவராயன், சிகரம்தொடு ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் குஜராத் நடிகை மோனல் கஜார். அதன்பிறகு புதிய படங்கள் கிடைக்காததால் தாய்மொழியான குஜராத்தில் நடித்து வந்த அவர், தற்போது தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் முதல் பாகத்தில் சுரபி நடித்த ரோலில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், புதிய படங்களுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த மோனல் கஜார் தற்போது ஆர்.கே வடிவேலு இணைந்து நடிக்கயிருக்கும் நீயும் நானும் நடுவுல பேயும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

தண்ணில கண்டம் படத்தை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் இயக்கும் இந்த படத்தில் மோனல்கஜாருக்கு ரொமான்ஸ் மட்டுமின்றி காமெடி காட்சிகளும் நிறையவே உள்ளதாம்.

அதனால் இதற்கு முன்பு நடித்த படங்களைவிட இந்த படத்தில் தனக்கு பர்பாமென்ஸ்க்கு கூடுதல் ஸ்கோப் இருப்பதாக கூறுகிறார் மோனல் கஜார்.

Leave a Response