திருநங்கைகள் பற்றி ஆல்பம் இயக்கிய கிருத்திகா உதயநிதி…!


வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் உதயநிதி ஸ்டாலின் மனைவி. சினிமா தவிர பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களில் பங்கேற்று பணியாற்றி வருகிறார். கிருத்திகா தற்போது திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

சியர் என்ற அமைப்பு திருநங்கைகளின் உரிமைக்காக போராடி வருகிறது. இந்த அமைப்பில் கிருத்திகாகவும் இணைந்து திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பணியாற்றி வருகிறார்.

அதுமட்டுமல்ல திருநங்கைகள் பற்றிய புரிதலை சமூகத்தில் உருவாக்கும் விதமாக ஸ்டாண்ட் பை மீ என்ற இசை ஆல்பத்தை இயக்கி உள்ளார். கவிஞர் விவேக் எழுதியுள்ள பாடல்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் 12 திருநங்கைகள் ஆடியும், நடித்தும் இருக்கிறார்கள். ஆல்பம் வருகிற 14ந் தேதி வெளியிடப்படுகிறது.

Leave a Response