‘விஜய் 61’ படப்பிடிப்பில் இணைந்தார் நித்யா மேனன்..!


ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பின் 100வது திரைப்படமாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’. இந்தப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். முன்னதாக இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க விஜய்யின் முன்னாள் நாயகி ஜோதிகா ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு காரணங்களால் ஜோதிகா விலகியதையடுத்து அவருக்கு பதிலாக நித்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது சென்னை புறநகர் பகுதியான கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஆதித்யாராம் ஸ்டூடியோஸில் நடைபெற்று வரும் முதல்கட்ட படப்பிடிப்பில் நித்யா மேனன் கலந்துக் கொண்டார்.

Leave a Response