அரசியல் களத்தில் குதித்தார் விஜய் ஆண்டனி..!


இதுநாள் வரை ஆக்சன் கதை, சைக்கோ த்ரில்லர் கதைகளில் மட்டுமே நடித்துவந்த விஜய் ஆண்டனி, முதன்முதலாக அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘எமன்’ படத்தில் அரசியல்வாதியாக களம் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசர் அதை உறுதிப்படுத்துகிறது. விஜய் ஆண்டனியுடன் மியா ஜார்ஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ’நான்’ படத்தின் மூலம் விஜய் ஆனடணியை ஹீரோவாக்கிய ஜீவா சங்கர் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.

தன்னுடைய படங்களுக்கு பிச்சைக்காரன், சலீம், எமன், நான் என்று வித்தியாசமான பெயர்களை வைத்து வருகிறார். அந்தவிதமாக இந்தப்படத்திற்கு எமன் என பெயர் வைத்துள்ளார். சீனியர் நடிகர் தியாகராஜன் நெகடிவ் அரசியல்வாதியாக நடிக்கிறார்.

Leave a Response