`குங்பூ யோகா’ பட புரமோஷனுக்காக இந்தியா வந்துள்ளார் ஜாக்கி சான்


தான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘குங்பூ யோகா’ படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக நடிகர் ஜாக்கி சான் இந்தியா வந்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில் மும்பை விமான நிலையம் வந்த அவரை சோனு சூட் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.

`குங்பூ யோகா’ படத்தை சீனாவின் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபியான சோனு சூட், தமிழில் வெளியான ‘அனேகன்’ படத்தில் கதாநாயகியாக தோன்றிய அமிரா தஸ்துர் ஆகியோர் ஜாக்கி சானுடன் இணைந்து ‘குங்பூ யோகா’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response