
த்ரிஷா சுதாரித்துக்கொண்டு விட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.. மற்ற நடிகைகளைப்போல திருமணம் செய்துகொண்டு, பின்னர் தேவையில்லாமல் விவாகரத்து, அது இதுவென அலைந்து அதற்கப்புறமாக திரும்பவும் பீல்டுக்குள் நுழைந்து அக்கா, அணியாக நடிப்பதை விட, திருமணத்தை தூக்கிப்போட்டு விட்டு கதாநாயகியாகவே காலத்தை கடத்த முடிவு செய்துவிட்டார். அதற்கேற்ற மாதிரி கதாநாயகியை மையபடுத்தும் கதைகளும் அவரை தேடி வரத்தான் செய்கின்றன..
அந்தவகையில் தெலுங்கில் சூப்பர்ஹிட்டான ‘பெல்லி சூப்புலு’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும வாய்ப்பு நேராக த்ரிஷாவின் வீட்டுக்கதவைத்தான் முதன்முதலி வந்து தட்டியுள்ளது. அவரும் அதை கப்பென பிடித்துக்கொண்டுவிட்டார். அதேபோல இந்தியில் ஹிட்டான ‘என்.எச்-10’ என்கிற படமும் தமிழில் ரீமேக் ஆகிறது.. அதிலும் த்ரிஷா தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சுந்தர்.பி என்பவர் இயக்கவுள்ளார்.


