ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘96’. இயக்குனர் பிரேம்குமார் ‘பசங்க’, ‘சுந்தர பாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை முதன்முறையாக இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய்சேதுபதியுடன் திரிஷா நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய்சேதுபதி 18 வயது இளைஞனிலிருந்து 96 வயது முதியவனாக நடிக்க இருக்கிறார். அதனால் இளம் வயது விஜய்சேதுபதி கேரக்டரில் காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். விஜய்சேதுபதியின் இளம் வயது கேரக்டரில் நடிக்க ஆதித்யா தேர்வாகிவிட்டதால், திரிஷாவின் பள்ளிப்பருவ வயது கேரக்டரில் நடிக்க ஒரு நடிகையை தேடி வருகிறது படக்குழு.