விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடிசேர்ந்த லட்சுமி மேனன்..!


கடந்த வருடம் போல் அல்லாமல் இந்த வருட ஆரம்பமே லட்சுமி மேனனுக்கு நல்லபடியாக ஆரம்பித்துள்ளது.. ஆம்.. கடந்த வருடம் ‘றெக்க’ படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த லட்சுமி மேனன், இந்த வருடத்திலும் அவருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்

ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இந்தப்படத்தை இயக்குகிறார். மதுரை பின்னணியில் உருவாக இருக்கும் இந்தப்படத்திற்கு கருப்பன்’ என பெயர் வைத்துள்ளார்கள்.. இன்றைய லேட்டஸ்ட் பிரச்சனையான ‘ஜல்லிக்கட்டை’ மையப்படுத்தும் விதமாக இந்தப்படத்தில் மாடுபிடி வீரனாக நடிக்க இருக்கிறாராம் விஜய்சேதுபதி.

Leave a Response