திமிரு வில்லனுக்கு நேர்ந்த அவமானம்..!


திமிரு படத்தில் வில்லனாக நடித்தவர் ஐ.எம்.விஜயன். இவர் இந்தியா முழுவதும் நன்கு அறிமுகமான ஒரு புட்பால் பிளேயர்.. அப்படிப்பட்டவருக்கு நேற்று முன்தினம் அவமரியாதை செய்யும்படியான நிகழ்வு ஒன்று அரங்கேறியது. விஷயம் இதுதான்..

இந்தியன் சூப்பர் லீக் புட்பால் போட்டிகளில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதும் இறுதிப்போட்டி நேற்று முன் தினம் கொச்சியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.. இந்த போட்டியைக்காண, கேரள விளையாட்டுத்துறை மற்றும் புட்பால் சங்கம் வாயிலாக தங்களுக்கு வேண்டிய வி.ஐ.பிக்களுக்கு டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

இதில் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான, புட்பால் பிளேயரான ஐ.எம்.விஜயனுக்கு சாதாரண பார்வையாளர்கள் அமரும் வரிசையில் உட்காருவதற்கான இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. தனக்கு சாதாரண வரிசையில் டிக்கெட் வழங்கிவிட்டு, புட்பால் விளையாட்டை பற்றி என்னவென்றே தெரியாதவர்களுக்கு வி.ஐ.பி கேலரியில் அமர்வதற்கு டிக்கெட் வழங்கப்பட்டதாக தனது மனக்குமுறலை நேற்று முன் தினமே வெளிப்படுத்தி இருந்தார்..

இந்தியன் சூப்பர் லீக்கின் கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் தூதுவராக நியமிக்கப்படிருந்த நடிகர் நிவின்பாலி, விஜயனை அழைத்து தனக்கு வழங்கப்பட்டுள்ள வி.ஐ.பி டிக்கெட்டுக்களில் அமர்ந்து போட்டியை காணச்செய்தார். இருந்தாலும் இந்த போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று இருந்தால் தனக்கான மரியாதையே வேறாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார் விஜயன்.

Leave a Response