சந்தானத்துக்கு ஜோடியாக மராத்தி நடிகை..!


கதாநாயகனாகிவிட்ட சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் எல்லாம் வட மாநிலங்களில் இருந்தே அழைத்து வரப்படுகின்றனர்.. அந்தவகையில் சந்தானம் நடித்துவரும் ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘சக்க போடு போடு ராஜா’ என இரண்டு படங்களின் கதாநாயகியாகவும் நடிக்கும் வைபவி சாண்டில்யா மராத்தியை சேர்ந்தவர்..

அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் தற்போது சந்தானம் நடித்துவரும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அதிதி பொஹன்கர்.. இவரும் மராத்தியை சேர்ந்தவர் தான்.. தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

Leave a Response