வி.ஐ.பி-2’வில் சரண்யாவுக்கு இடம் இருக்கிறதா..?


பொதுவாக படங்களின் முதல் பாகத்தில் நடித்த முக்கிய கேரக்டர்கள் எல்லாம் அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுவது வாடிக்கை. அந்தவகையில் தனுஷ் நடிப்பில் வெற்றிபெற்ற ‘வி.ஐ.பி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார்..

இதற்கான படப்பிடிப்பை கிளாப் அடித்து துவங்கி வைத்தார் சூப்பர்ஸ்டார் ரஜினி.. இந்தப்படத்தின் பூஜையில் முதல் பாகத்தில் இடம்பெற்ற முக்கிய நடிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்..

அதில் தனுஷின் அம்மாவாக நடித்த சரண்யாவும் ஒருவர்.. ஒருவேளை முதல் பாகத்தின் சென்டிமென்டாக இந்தப்படத்தின் பூஜையில் கலந்துகொள்ள வந்திருக்கிறார் என்றே பலரும் நினைத்தார்களாம்..

ஆனால் இரண்டாம் பாகத்திலும் தான் இருப்பதாக கூறியுள்ள சரண்யா, தனது என்ட்ரி வித்தியாசமான அதிரடியாக இருக்கும் என்று கூறியுள்ளாராம்.. முதல் பாகத்தில் அவர் இறந்துபோவதாகத்தானே கதை இருந்தது.. அதெப்படி இந்த பாகத்தில் அவர் வரமுடியும் என கேட்பவர்களுக்கு, செம சஸ்பென்ஸ் வைத்திருக்கிறாராம் சௌந்தர்யா.

Leave a Response