ஜி.வி.பிரகாஷை ‘யு’ சான்றிதழ் நாயகனாக்கிய ராஜேஷ்..!


ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் எதுவும் ‘யு’ சான்றிதழ் பெற்றதில்லை.. காரணம் இளைஞர்களை கவர்கிறேன் என்கிற பெயரில் அவரது படங்களின் காட்சிகளும் வசனங்களும் சென்சார் அனுமதித்து இருக்கும் எல்லையை தாண்டி விடுவதால் அவர் படங்களுக்கு ‘யு’ சான்றிதழ் கிடைக்கவே இல்லை..

தற்போது தான் இயக்கியுள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் மூலம் அந்த கறையை போக்கியுள்ளார் இயக்குனர்.. ஆம். இந்தப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படம் வரும் நவ-10ஆம் தேதி வெளியாகிறது.

Leave a Response