விஷ்ணு விஷால் படத்திற்கு பாண்டியராஜன் பட டைட்டில்..!


‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் மூலம் தயாரிப்பில் இறங்கி வெற்றி கண்டவர் நடிகர் விஷ்ணு விஷால், இந்தப்படத்தை தொடர்ந்து தனது தயாரிப்பில் இரண்டாவது படத்தைத் தயாரிக்கிறார் விஷ்ணுவிஷால். இந்த படத்தை முருகானந்தம் என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தில் விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக…. கதாநாயகியாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. பெயர் வைக்காமல் துவங்கப்பட்ட இப்படத்திற்கு இப்போது ‘கதாநாயகன்’ என்று பெயர் சூட்டியுள்ளார் விஷ்ணு விஷால்.

1988-ஆம் ஆண்டு முக்தா சீனிவாசனின் தயாரிப்பு இயக்கத்தில் பாண்டிராஜன், ரேகா நடித்து வெளியான படம் தான் கதாநாயகன். ஏற்கனவே வெளியான படங்களில் தலைப்புகளில் மீண்டும் படம் தயாரிப்பது தானே இப்போதெல்லாம் ஃபேஷனாகவே மாறி வருகிறது. இந்த வரிசையில் கதாநாயகன் என்ற படமும் சேரவிருக்கிறது.

Leave a Response