
‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்து அடுத்ததாக வெளிவந்து வசூலை அள்ள காத்திருக்கும் படம் தான் ‘சைத்தான்’. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் அருந்ததி நாயர் கதாநாயகியாக நடிக்க, முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நாட்களில் எல்லாம் ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு விஷயத்தை உணர்ந்தாராம்.. அதாவது காட்சிக்கு தேவை என்றால் பத்து லட்சம் ரூபாயை கூட விஜய் ஆண்டனி (மனைவி) தந்துவிடுவாராம் ஆனால் காட்சிக்கு தேவையில்லை என்றால் அது பத்து பைசா செலவு என்றாலும் அதற்கு காரணம் கேட்ட பின்பே கொடுப்பாராம்..
அதனால் இந்தப்படத்தின் சிக்கனமான தயாரிப்பு செலவுகளை பார்த்து நாமும் ஏன் ஒரு படம் தயாரிக்க கூடாது என்கிற விபரீத ஆசை ஒய்.ஜி.க்கு வந்துவிட்டதாம்.. அந்த அளவுக்கு இந்தப்படத்தின் புரடக்சன் வேலைகள் ஒய்.ஜி.யை ஈர்த்துவிட்டதாம்.. ஏற்கனவே நடிகர் மனோபாலா ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் தயாரிப்பில் நுழைந்து வெற்றிக்கொடி கட்டிவிட்டார்… அதனால் ஒய்.ஜி.யும் தாராளமாக படத்தயாரிப்பில் இறங்கலாம்.


