‘சைத்தான்’ சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி..!


இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்தாலும் சர்ச்சை ஏற்படுத்தும்படியான காரியம் எதையும் செய்யமாட்டார்.. அனால் பிச்சைக்காரன் படஹ்தில் ‘கோட்டா’ என்கிற வார்த்தையை பாடலில் பயன்படுத்தியது தவறு என எதிர்ப்பு குரல் எழ, அதற்காக மன்னிப்பு கூட கேட்டார்.

அப்படிப்பட்ட விஜய் ஆண்டனி நடித்து அடுத்ததாக வெளிவரும் படம் சைத்தான். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டீசரின் பின்னணி இசையாக தைத்ரீய உபநிஷத வேத மந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது

அந்த மந்திரத்தில் கடைசியில் வரும் “சன்னோ விஷ்ணு ருருக்ரம:” என்ற மந்திரத்தை “விஷ்ணு சைதானே” என்று ஒலிக்கும்படி செய்திருக்கிறார். தயவு செய்து இந்த புனிதமான வேத மந்திரங்களை இப்படி தரக்குறைவாக உபயோக படுத்துவதை நிறுத்துங்கள் என்று இந்து வேத விற்பன்னர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Leave a Response