காதலரை கரம் பிடித்தார் ‘பிச்சைக்காரன் நாயகி..!


அறிமுகமான படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துவிடும் சில கதாநாயகிகள் ஒன்றிரண்டு படங்களோடு ரசிகர்களை ஏங்கவைத்துவிட்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள். ஷாலினி, நஸ்ரியா போன்றவர்கள் எல்லாம் அந்தவகையி சார்ந்தவர்கள் தான்.. இப்போது லேட்டஸ்டாக ‘பிச்சைக்காரன்’ படத்தின் நாயகி சாத்னா டைட்டஸும் அந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்…

ஆம்.. விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான கார்த்திக் என்பவரை காதலித்து வருவதாகவும், கூடிய விரைவில் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தார். இதனால் சாத்னாவின் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. சில பல குடும்ப எதிர்ப்புகளுக்கு பிறகு இவர்கள் காதல் பிப்-6ல் சுமூகமாக திருமணத்தில் முடிந்துள்ளது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 10ம் நாள் சென்னையில் விமர்சையாக நடைபெறவுள்ளது.

Leave a Response