விவேக்குடன் கூட்டணி ; சந்தானம் இறங்கி வந்ததன் பின்னணி..!


‘சக்க போடு போடு ராஜா’.. இதுதான் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்.. எம்.ஜி.ஆர்.படத்தின் பாடல் வரியை டைட்டிலாக்கி விட்டார்.. ஜி.எல்.சேதுராமன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தை நடிகர் வி.டி.வி.கணேஷ் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் பவர்ஸ்டார், ரோபோ சங்கர், மயில்சாமி, ஆகியோர் நடிக்கின்றனர்..

அதைவிட முக்கியமான விஷயம் இந்தப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார் விவேக். பொதுவாக காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறிய பின்னர் தங்களது படங்களில் உடன் நடிக்கும் காமெடி நடிகர்களாக, ஏற்கனவே தனது வட்டத்தில் இருப்பவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.

சந்தானம் கூட தான் ஹீரோவாக நடித்த படங்களில் இதுவரை அப்படித்தான் பண்ணியிருக்கிறார்.. தனக்கு சமமான ஒரு காமெடி நடிகரை தனது படத்தில் நுழைக்க வேண்டிய கட்டாயம் சந்தானத்துக்கு ஏன் வந்தது…? அதற்கு காரணமும் இருக்கிறது.. தான் இப்போது ஹீரோவாகி விட்டதால் தொடர்ந்து படம் முழுவதும் தானே காமெடி பண்ணிக்கொண்டிருந்தால், ஆக்சன் காட்சிகளும் டூயட் காட்சிகளும் எடுபடாமல் போய்விடும் என்பதை சந்தானம் உணர்ந்துகொண்டார்.

அதனால் தான் பெரிய ஹீரோக்கள் நடிக்கும்போது தங்களுடன் காமெடியனை சேர்த்துக்கொள்வது போல இந்தப்படத்தில் விவேக்கை சேர்த்துக்கொண்டாராம். தான் ஹீரோ ஆகிவிட்டதை தானே உணராவிட்டால் மற்றவர்கள் எப்படி தன்னை கமர்ஷியல் ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதால் தான் இந்த முடிவாம்.

Leave a Response