துபாயில் நடைபெறும் சந்தானம் படத்தின் க்ளைமாக்ஸ்..!


தில்லுக்கு துட்டு படஹ்தின் வெற்றியை தொடர்ந்து ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் சர்வர் சுந்தரம் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.. இந்தப்படத்தின் ஒரே ஒரு பாடலும், க்ளைமாக்ஸ் காட்சியும் மட்டுமே படமாக்கப்பட இருக்கின்றன.. இதற்காக துபாய் பறந்துள்ளனர் சர்வர் சுந்தரம் படக்குழுவினர்.

துபாயின் மிக முக்கியான புகழ்பெற்ற இடங்களில் பாடல் காட்சியை படமாக்குகின்றனர்.. க்ளைமாக்ஸ் காட்சியும் துபாயை முன்னிறுத்தியே அமைக்கப்பட்டுள்ளதாம். மொத்தம் பதினைந்து நாட்களில் அங்கே படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்தபின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் துவங்கப்பட இருக்கின்றனவாம். இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Leave a Response