தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் அவரது 60வது படத்திற்கு ‘எங்க வீட்டுப்பிள்ளை’ என்கிற டைட்டில் வைக்கப்பட இருப்பதாக 90 சதவீதம் உறுதியாக சொல்லப்பட்டு வந்தது.. மீடியாவிலும் அந்தப்பெயர் தான் புழக்கத்தில் இருந்து வருகிறது.. ஆனால் விஜயோ, தயாரிப்பு நிறுவனமோ அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தநிலையில் தான் இந்தப்படத்திற்கு ‘பைரவா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது..
அதுமட்டுமல்ல படம் வரும் 2017 வெளியீடு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல சர்ச்சையான விஷயமாக படக்குழுவினர் இந்த அறிவிப்பையும் போஸ்டரையும் வெளியிடுவதற்கு முன்னரே இந்த டைட்டில் இனையதளத்தில் லீக்கானது விஜய தரப்பிற்கு கொஞ்சம் வருத்தம் தான்.
விஜய் ஜோடியாக கீஎர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னொரு கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா வினோத் நடிக்கிறார்.. காமெடி நடிகர் சதீஷ் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார்.. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.