திடீரென இறங்கிவரும் எஸ்.பி.வேலுமணி – பின்னணி இதுதான்

தேர்தல் தோல்வி காரணமாக அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது.எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஓர் அணி செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.அதனால், அவர் மற்றும் அவரது அணியினரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விசுவநாதன் ஆகியோர் இணைந்து வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது….

அதி​முக இன்று தனிப்​பட்ட சுய​லாபத்​துக்​காக​வும்,பதவி வெறிக்​காக​வும் செயல்​படும் ஒரு சில​ரால் இந்த எஃகுக் கோட்​டை​யின் அடித்​தளம் அசைத்​துப் பார்க்​கப்​படு​கிறது.தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக தோல்​வியைச் சந்​தித்​தது.

அதைத்​தொடர்ந்​து,பெரும்​பான்​மை​யான சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களும்,முக்​கிய நிர்​வாகி​களும் பொதுச்செய​லா​ளர் பழனி​சாமியைச் சந்​தித்​து,அவரது தன்​னிச்​சை​யான முடிவு​களால்​தான் இந்​தத்தோல்வி நேர்ந்​தது என்று கூறி, தோல்விக்​கான காரணத்தை ஆராய அவசர பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு​வைக் கூட்ட வலி​யுறுத்​தினோம்.
முக்​கிய​மாக திமுக​வுடன் கூட்​டணி வேண்​டாம் என்​றும் வலி​யுறுத்​தினோம்.

இதற்கு பொதுச்செய​லா​ளர் உடன்​ப​டாத​தால் கருத்து வேறு​பாடு தொடங்​கியது.கடந்த 11 ஆம் தேதி அன்று
பழனி​ச்சாமி, தற்​காலிக பேர​வைத் தலை​வரைச் சந்​தித்து 17 சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் ஆதரவு இருப்​ப​தாக மனு அளித்​ததன் மூலம் இந்​தப்பிளவு பொது​வெளி​யில் தெரிந்​தது.அதனால்,30 உறுப்​பினர்​கள் எங்​கள் தரப்பு ஆதர​வுக் கடிதத்தை வழங்க வேண்​டிய அவசி​யம் ஏற்​பட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக,கட்​சி​யின் முன்​னோடிகள் உள்​ளிட்ட 28 பேரை ஒரே கையெழுத்​தில் நீக்கி பழனி​ச்சாமி
அறி​வித்​துள்​ளார்.தேர்​தல் ஆணைய மற்​றும் நீதி​மன்ற சட்​டப்​படி,ஒரு இயக்​கத்​தில் பிளவு ஏற்​பட்ட நிலை​யில்,
ஒரு​வரை நீக்​கவோ அல்​லது சேர்க்​கவோ இரு பிரி​வினருக்​கும் அதி​காரம் கிடை​யாது.

2017 ஆம் ஆண்​டிலும் இதே​போன்ற அறி​விப்​பு​கள் செல்​லாது என்று நீதி​மன்​றத்​தா​லும்,தேர்​தல் ஆணை​யத்​தா​லும் அறிவிக்​கப்​பட்​டது.எனவே,பழனிச்​சாமி வெளி​யிட்ட பதவி நீக்க அறி​விப்​பு​கள் செல்​லாது.நீக்​கப்​பட்​ட​வர்​கள்,அவர்​கள் வகித்த அதே பொறுப்​பு​களில் தொடர்​வார்​கள்.

இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

இதன்பின், எஸ்​.பி.வேலுமணி வெளி​யிட்​டுள்ள மற்​றொரு அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது….

அதி​முக பொதுச்செய​லா​ளர் எடப்பாடி பழனி​ச்சாமி,உண்மை நிலையை இந்தநேரத்​தி​லும் உணராமல் அறிக்கை
விட்​டிருப்​பது என்​பது மிகுந்த வருத்​தம் அளிக்​கிறது.தங்​களின் வார்த்​தைகளை, தம்​பிகளாக நாங்​களும்
ஏற்​றுக்​கொண்டு செயல்​பட்​டோம்.ஆனால் தோல்வி வந்த பிறகு,தலைமைப் பொறுப்​பில் இருப்​பவர் இறங்கி வந்து எல்​லோரிட​மும் பேச முன்​வந்​திருக்க வேண்​டும்.அதை விடுத்து எப்​போதும்போல ‘நான் மட்​டுமே எல்​லாம்’ என்ற நிலை​யில் பேசிக்கொண்​டிருப்​பதை உணர்​வுள்ள எந்த அதி​முக தொண்​ட​னும் ஏற்​றுக்​கொள்ள மாட்​டான்.

மக்​கள் ஆதரவு பெற்ற தவெக அரசுக்கு ஆதரவு அளிப்​பது என்ற அரசி​யல் அறத்​தோடு அதி​முக​வின் ஆதரவை பெரும்​பான்மை சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் வழங்​கி​யுள்​ளோமே தவிர,யாரை​யும் அவமரி​யாதை செய்​யும்
எண்​ணமோ,அதி​முகவை பிரிக்​கும் எண்​ணமோ எங்​கள் யாருக்​கும் இல்​லை.இப்​போதும் நீங்​கள் அழைத்​தால்,
பேச நாங்​கள் தயார்.

தோல்விக்​கான காரணங்​களை எல்​லோரும் சேர்ந்து ஆராய்​வோம்.அதி​முக​வின் எதிர்​காலப் பாதையை அனை​வரும் ஒன்​றிணைந்து தீர்​மானிப்​போம்.தங்​களிடம் நாங்​கள் கேட்​பது ஒன்​று​தான். ‘போங்க போங்க’ என்று எப்​போதும் போல விரட்​டியடிக்​காமல்,‘வாங்க வாங்க’ என்று ஒரு​முறை அழைத்துப் பாருங்​கள்.எல்​லாமே மாறும்.கட்​சி​யும் நல்லா இருக்​கும்​.

இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

திடீரென எஸ்.பி.வேலுமணி இறங்கிவந்து அறிக்கை விடக்காரணம்,அவர்கள் அணிக்குள்ளேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதுதான் என்று கூறப்படுகிறது.

யார் யாருக்கு அமைச்சர் பதவி? என்பதில் பெரும் சிக்கல் எழுந்திருப்பதாகவும் அதனால் எஸ்.பி.வேலுமணி அணியிலிருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீண்டும் எடப்பாடி பக்கம் சாய்ந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த மாவட்டச் செயலாளருக்கு கே.சி.வீரமணி ஆதரவு தெரிவித்துள்ளார். புதிய மாவட்டச் செயலாளருக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார். நேற்றுவரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன்;இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்.எடப்பாடி பழனிச்சாமிதான் பொதுச்செயலாளர்;அவர் பின்னாலே பயணிப்போம்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அனைவரும் பயணிக்க வேண்டும் என்றும் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

இதற்குக் காரணம் பதவிப் பகிர்வில் வந்த சிக்கல்தான் என்று சொல்லப்படுகிறது.அதனாலேயே எஸ்.பி.வேலுமணி இறங்கி வந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response