
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும்,முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும் இரு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் விஜய் கொண்டு வந்த,தவெக ஆட்சி மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரித்து சி.வி.சண்முகம் தரப்பு 25 அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிமுக உறுப்பினர்கள் 22 பேர் வாக்களித்தனர்.
எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்துச் செயல்பட்ட நிலையில், சி.வி.சண்முகம் மற்றும் ஆதரவாளர்கள் மொத்தம் 26 மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டது.பல்வேறு தொகுதிகளைச் சேர்த்து, 17 மாவட்டங்களாகக் குறைத்து,அவற்றுக்கான புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை….
அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர்,திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலையச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து எஸ்.பி.வேலுமணி,அமைப்புச் செயலாளர், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து சி.வி.சண்முகம்,அமைப்புச் செயலாளர்,திருவாரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து காமராஜ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் அமைப்புச் செயலாளர்,புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து சி.விஜயபாஸ்கர்,அமைப்புச் செயலாளர்,நாமக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து பி.தங்கமணி, அமைப்புச் செயலாளர், தருமபுரி மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து கே.பி.அன்பழகன்,அமைப்புச் செயலாளர்,திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து பா.பென்ஜமின்,அமைப்புச் செயலாளர், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து உடுமலை இராதாகிருஷ்ணன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் அமைப்புச் செயலாளர்,தேனி மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து ஜக்கையன்,அமைப்புச் செயலாளர்,திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து இசக்கி சுப்பையா,கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.சி.சம்பத்,திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து கே.சி.வீரமணி, கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர்,ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து இராமலிங்கம்,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி,கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அருண்மொழிதேவன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவி,இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் சுகுமார், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேந்திரன்,நீலகிரி மாவட்டச் செயலாளர் வினோத்,திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன்,திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி,திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் குமார்,தஞ்சாவூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ரெத்தினசாமி, தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் சேகர் ஆகியோர் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து இன்றுமுதல் நீக்கப்படுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டச் செயலாளராக ஆர்.பசுபதி,கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக செ.ம.வேலுசாமி,புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக வி.பழனிவேல்,நாமக்கல் மாவட்டச் செயலாளராக கே.பி.பி.பாஸ்கர்,திருவாரூர் மாவட்டச் செயலாளராக ஆர்.டி.மூர்த்தி,திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளராக ரவிசந்திரன்,இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக ஏ.பி.எஸ்.லோகநாதன் லோகநாதன்,இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளராக சுமைதாங்கி சி.ஏழுமலை,திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராக எஸ்.பசுபதி,கடலூர் மாவட்டச் செயலாளராக எம்.சி.தாமோதரன்,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளராக எம்.ராமு,ஈரோடுமாநகர் மாவட்டச் செயலாளராக ஆர்.மனோகரன்,நீலகிரி மாவட்டச் செயலாளராக பால.நந்தகுமார்,திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக சி.கார்த்திகேயன், கரூர் மாவட்டச் செயலாளராக கே.கமலக்கண்ணன், தேனி மேற்கு மாவட்டச் செயலாளராக வி.டி.நாராயணசாமி, திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளராக கே.ராமசுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அவருடைய ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் சட்டமன்றக் கட்சி கைவிட்டுப் போனாலும் வெளியில் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் முதல்முயற்சியில் எடப்பாடி வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.


