
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனது முதல் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறது. மாலை நிலவரப்படி அக்கட்சி 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆளுங்கட்சியினருக்குப் பெரும் அதிர்ச்சியையும் மற்றோருக்கு பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வரும் வேளையில்,விஜய் வீட்டுக்கு முதல் ஆளாக நடிகை த்ரிஷா சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்று மே 4 ஆம் தேதி நடிகை த்ரிஷாவின் 43 ஆவது பிறந்தநாள் ஆகும். முன்னதாக தனது பிறந்தநாளையொட்டி திருப்பதி திருமலை வேங்கடாசலபதி கோயிலில் சாமி தரிசனம் செய்த த்ரிஷா, அங்கிருந்து நேரடியாக சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.
வெள்ளை நிற மகிழுந்தில் விஜய்யின் வீட்டிற்குள் த்ரிஷா நுழையும் காட்சிகள் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. அவரைப் படம் பிடிக்கப் புகைப்படக் கலைஞர்களும், ஊடகத்தினரும் விஜய்யின் வீட்டின் முன் பெருமளவில் திரண்டனர். பிங்க் நிற உடையில் புன்னகையோடு காட்சியளித்த த்ரிஷா, விஜய்யைச் சந்தித்து தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
விஜய்,த்ரிஷாவோடு திருமணம் மீறிய உறவில் இருக்கிறார் என்று குற்றம் சாட்டி விஜய்யின் மனைவி சங்கீதா மணவிலக்குக் கேட்டிருக்கும் நேரத்தில் நடந்திருக்கும் இந்நிகழ்வு சங்கீதாவின் குற்றச்சாட்டு உண்மை என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளதெனப் பலரும் சொல்கின்றனர்.


