28 இல் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரசு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரசுக் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.அதற்காக, 27 பெயர்கள் கொண்ட காங்கிரசு முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

வேட்பாளர்கள் பட்டியல் விவரம்…

1.ஸ்ரீபெரும்புதூர் (தனி): செல்வப் பெருந்தகை,2.பொன்னேரி (தனி): துரை சந்திரசேகர்,3.வேளச்சேரி: ஹசன் மௌலானா,4.சோளிங்கர்: முனிரத்னம்,5.ஊத்தங்கரை (தனி): குப்புசாமி,6.கிருஷ்ணகிரி: செல்லகுமார்,
7.பென்னாகரம்: ஜி.கே.எம்.தமிழ்க் குமரன்,8.ஆத்தூர் (தனி): அர்த்தநாரி,9.ஈரோடு கிழக்கு: கோபிநாத்,
10.உதகை: இராமச்சந்திரன்,11.கவுண்டம்பாளையம்: சூர்ய பிரகாஷ்,12.சிங்காநல்லூர்: ஸ்ரீநிதி,13.துறையூர் (தனி): விச்சு லெனின் பிரசாத்,14.கடலூர்: சந்திரசேகரன்,15.மயிலாடுதுறை: ஜமால் யூனுஸ் முகமது,16.அறந்தாங்கி: இராமச்சந்திரன்,17.காரைக்குடி: மாங்குடி,18.உசிலம்பட்டி: சரவணக் குமார்,19.சிவகாசி: கணேசன் அசோகன்,
20.திருவாடானை: இராம கருமாணிக்கம்,21.ஸ்ரீவைகுண்டம்: ஊர்வசி அமிர்தராஜ்,22.சங்கரன்கோவில் (தனி): சங்கை கணேசன்,23.அம்பாசமுத்திரம்: வி.பி.துரை,24.நாங்குநேரி: ரூபி மனோகரன்,25.குளச்சல்: தாரகை கத்பர்ட்,
26.விளவங்கோடு: பிரவீன்,27.கிள்ளியூர்: இராஜேஷ்குமார்

மேலூர் தொகுதி வேட்பாளர் தொடர்பாக இழுபறி நீடிப்பதால் அந்தத் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

Leave a Response