திருமாவளவன் கருத்தைத் திரிக்கும் டிடிவி.தினகரன் – வலுக்கும் எதிர்ப்புக்குரல்

அமமுக தலைவர் டிடிவி.தினகரன், வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில்…

தமிழ், தமிழ் கலாசாரம் அழிய வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என திருமாவளவன் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாசாரத்தையும் போற்றிப் பாதுகாத்து,வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த அவரது அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்துக்குரியது.

ராஜராஜன் தமிழ்ப் பெயரா… ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திருமாவளவனுக்கு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப் பெயரா என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.

எனவே, திமுக-வையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை திருமாவளவன் இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

டிடிவி.தினகரனின் இந்தப் பதிவிற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திருமாவளவன் அவர்கள், சோழ மன்னர்கள் காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் மிகுந்திருந்தது.மன்னராக இருந்தாலும் அவர்கள், பார்ப்பனர்களின் கருத்துருவாக்கத்துக்கு ஆட்பட்டிருந்தனர்.அதனால்தான் அவர்கள் பெயர்கள் தமிழாக இல்லை என்பதைத்தான் குறிப்பிட்டிருந்தார்.

அதே பார்ப்பனர்களின் ஆதிக்கம் இன்றுவரை தொடருகிறது.அதனால்தான் தமிழர்களின் பெயர்களில் தமிழ் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

தலைவர் திருமாவளவன் தன் தந்தை பெயரையும் தமிழ்ப்படுத்தி தொல்காப்பியன் என்று வைத்தவர்.

அவர் பேசியதன் பொருள் புரியாமல்,ஒரு பாப்பாத்தி தலைமையை ஏற்று அவர் காலடியில் கிடந்த தினகரன்,தலைவரின் கருத்தைத் திரித்துப் பேசியிருக்கிறார் என்கிற கண்டனக் குரல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response