ஓபிஎஸ் குறித்து மூன்றாம்மனிதர் போல் பதிலளித்த தினகரன் – தொண்டர்கள் வியப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி…

ஜெயலலிதாவின் தொண்டர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் அதிமுகவை எங்களது கூட்டணிக்கு அமித்ஷா கொண்டு வந்துள்ளார்.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தேஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள். எனவே அமித்ஷா சொல்வது தான் எங்களது கருத்து. அதுதான் எங்கள் நிலைப்பாடு.
அமித்ஷா தமிழ்நாடு வரும் நேரத்தில்,ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை அதிமுகவில் ஒன்றிணைப்பது என்பது, இன்னொரு உட்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலையிடமாட்டோம்.
தேஜ கூட்டணி முதல்வர் வேட்பாளரை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
அமித்ஷா சொல்லும் வேட்பாளரை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓபிஎஸ் பற்றி டிடிவி.தினகரனிடம் கேட்டபோது, ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார்.அவர் எங்களோடு இணைவார் என்பதை மட்டும் இப்போது தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.

அவரேம் நேற்று ஓபிஎஸ் உள்ளிட்டோரை அதிமுகவில் ஒருங்கிணைப்பது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்று சொல்லியிருக்கிறார். இதுவரை ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு ஆதரவாகப் பேசிவந்த டிடிவி.தினகரன் இப்போது மூன்றாம் மனிதர் போல் பேசியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Response