தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது பா.ஜ.க.கூட்டணி அமைத்த நாள் முதல்,. 2026 இல் அதிமுக -பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார்.பாஜகவினரும் அதை வழிமொழிந்து வருகின்றனர்.
இந்தப்பக்கம் பாஜகவின் இந்தக் கருத்துக்கு அதிமுகவினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்,
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. 2026 இல் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். கூட்டணிக்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்பது போகப் போகத் தெரியும். எடப்பாடி பழனிச்சாமி வியூகத்துடன்தான் தேர்தல் கூட்டணி அமைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கே.சி.கருப்பணன் முன்னாள் அமைச்சர் மட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரும் கூட.அதனால் அவர் கூறும் கருத்துக்கு முக்கியத்துவம் இருப்பதாகவும் அதை எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தாகவே எடுத்துக் கொள்ளலாம் என்பதால் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.