16 ஆம் ஆண்டு- 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு தமிழறிஞர்கள் மரியாதை

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவிய 16–வது ஆண்டு விழாவையொட்டி, திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. கடந்த 2000–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி இந்த சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்து, நேற்று 16–வது ஆண்டு விழா தொடங்கியது. இதையொட்டி திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மற்றும் தி.மு.க.வினர் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதற்காக தனி படகு மூலம், தமிழ் அறிஞர்கள் கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில், திருவள்ளுவர் சிலைக்கு சென்றனர். ஆய்வு மைய தலைவர் பத்மநாபன், எழுத்தாளர் பொன்னீலன் மற்றும் சிதம்பர நடராஜன், நீலகண்டபிள்ளை, முத்து கருப்பன், பட்டேல் ஏ.ஆர்.சுந்தரம் பிள்ளை உள்பட பல தமிழ் அறிஞர்கள், திருவள்ளுவர் சிலைக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரை பாரதி தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், கன்னியாகுமரி நகர தி.மு.க. செயலாளர் குமரி ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தி.மு.க. மீனவர் அணி செயலாளர் பெர்னார்டு, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், பேரூர் செயலாளர்கள் சாய்ராம், வைகுண்ட பெருமாள், இளங்கோ, பாபு, ஆல்வின் ஜெபசிங், லாரன்ஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் தமிழ்மாறன், தேர்தல் பொறுப்பாளர் கேட்சன், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் பூதலிங்கம்பிள்ளை, கன்னியாகுமரி மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Leave a Response