திருநங்கை பிரித்திகாவுக்கு தமிழர் உரிமைக்கழகம் பாராட்டுவிழா

இந்தியாவில் முதன் முறையாக காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணி நியமனம் பெற்ற திருநங்கை பிரித்திகா யாஷினிக்கு, மருத்துவர் எம்.ராசேந்திரன் தலைமையில் கோபியில் பாரட்டு விழா நடைபெற்றது.

விழாவில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், எழுத்தாளர் கோவை பாமரன், திரைப்பட இயக்குநர் வ.கெளதமன், பாடலாசிரியர் புலமைப்பித்தன், மாநில மகளிர் ஆணையம் முன்னாள் தலைவர் ராமாத்தாள் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

அதைத்தொடர்ந்து, பிரித்திகா யாஷினி பேசியதாவது: திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். அரசுவேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும். திருநங்கைகளை தெங்வங்களாக நினைக்காவிட்டாலும் பரவாயில்லை முதலில் மனிதர்களாக எண்ண வேண்டும்.
திருநங்கைகளுக்குப் பெற்றோர்கள் ஆதரவளித்து சமூகத்தில் சாதிக்க துணைபுரிய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் திருநங்கைகள் பணிபுரிய வேண்டும். அதற்கு அரசும், பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
மேலும், தன்னை அழைத்து முதன் முதலாக கோபியில் பாராட்டு விழா நடத்தும் தமிழர் உரிமை கழகத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோபி தமிழர் உரிமைக் கழகம் ஒருங்கிணைப்பாளர் மா.கந்தசாமி தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Leave a Response