சாகித்ய அகாதமிக்குள் சாதி ஆதிக்கம் – அதிரும் சர்ச்சை

பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பெரியசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது கண்டிக்கத் தக்கது.

பேராசிரியர் பெரியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது குறித்த புகார் மீது தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட ஒருவரை பொதுக்குழு உறுப்பினராக நியமித்தால், அது சாகித்ய அகாடமியின் மதிப்பைக் குறைத்துவிடும்.

சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பேராசிரியர் பெரியசாமியை நீக்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தமிழ்நாடு அரசின் விசாரணையை விரைந்து நடத்தி, சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும்

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மேற்கொண்டு விசாரித்தபோது சில அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.

அவை என்னவெனில்?

இலக்கிய வாசனையே இல்லாத இந்த பெரியசாமி, சாகித்ய அகாதமி குழுவுக்குள் செல்ல அவர் சார்ந்த சாதிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

சாகித்ய அகாதமிக்குள் செல்வாக்குள்ள கவிஞர் சிற்பியின் முன்னெடுப்பில் இந்த பரிந்துரை நடந்துள்ளதாம். தன் சாதிக்காரர் எனபதை மட்டுமே தகுதியாகக் கொண்டு சிற்பி இந்த வேலையைச் செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

பெரியசாமியின் நியமனத்தை எழுத்தாளர்கள் தமிழவன், மாலன் ஆகியோர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

ஆனாலும் பிடிவாதமாக சிற்பியின் ஆதரவு காரணமாக பெரியசாமியை பல்பலைக்கழகத் துணைவேந்தர் பரிந்துரைத்துள்ளார்.

இலக்கிய உலகின் உயரிய அமைப்பில இலக்கியமென்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் ஒருவரை நியமிக்கும் கொடுமை நடந்தேறுகிறது.

இதை அறிந்தவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

அதன்விளைவே அன்புமணியின் பதிவு.

பெரியசாமியின் நியமனம் காரணமாக சாகித்யகாதமிக்கும இழுக்கு, பரிந்துரைத்த துணைவேந்தருக்கும் சிக்கல் காத்திருக்கிறது என்கிறார்கள்.

Leave a Response