ஐபிஎல் 2023 மார்ச் 31 இல் தொடக்கம் – முழுஅட்டவணை

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 31 ஆம் தேதி அன்று தொடங்குகிறது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்யவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது.

10 அணிகளும் 7 போட்டிகள் சொந்த மைதானத்திலும், 7 போட்டிகள் வெளியூரிலும் லீக் சுற்றில் விளையாட உள்ளன.

மொத்தம் 70 லீக் போட்டிகள். கடைசி லீக் போட்டி மே 21 ஆம் தேதி நடைபெறுகிறது. மே 28 ஆம் தேதி இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

12 மைதானங்களில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள்: அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலாவில் போட்டிகள் நடைபெறுகின்றன.

கடந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

போட்டிகள் அனைத்தையும் ஜியோ சினிமா மொபைல் செயலியில் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2023 குரூப்கள்: 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ: மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்டஸ்.

குரூப் பி: சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ்.

போட்டி 1: மார்ச் 31 vs குஜராத் டைட்டன்ஸ் – அகமதாபாத்
போட்டி 2: ஏப்ரல் 3 vs லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் – சேப்பாக்கம்
போட்டி 3: ஏப்ரல் 8 vs மும்பை இந்தியன்ஸ் – மும்பை
போட்டி 4: ஏப்ரல் 12 vs ராஜஸ்தான் ராயல்ஸ் – சேப்பாக்கம்
போட்டி 5: ஏப்ரல் 17 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பெங்களூரு
போட்டி 6: ஏப்ரல் 21 vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சேப்பாக்கம்
போட்டி 7: ஏப்ரல் 23 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கொல்கத்தா
போட்டி 8: ஏப்ரல் 27 vs ராஜஸ்தான் ராயல்ஸ் – ஜெய்ப்பூர்
போட்டி 9: ஏப்ரல் 30 vs பஞ்சாப் கிங்ஸ் – சேப்பாக்கம்
போட்டி 10: மே 4 vs லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் – லக்னோ
போட்டி 11: மே 6 vs மும்பை இந்தியன்ஸ் – சேப்பாக்கம்
போட்டி 12: மே 10 vs டெல்லி கேபிடல்ஸ் – சேப்பாக்கம்
போட்டி 13: மே 14 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சேப்பாக்கம்
போட்டி 14: மே 20 vs டெல்லி கேபிடல்ஸ் – டெல்லி

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response